கோழியின வளர்ப்பு நிபுணத்துவம்

பிராணிகள் உற்பத்திப் பிரிவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கோழி பண்ணைகள், மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவாகத் திகழ்கிறது. இதன் அடிப்படையில், பண்ணைக் கோழிகள் உற்பத்தி, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் போன்ற அனைத்து அம்சங்களிலும் நிபணத்துவம் கொண்டதொரு உறுதியாக குழுவை BIOMIN வளர்த்துள்ளது.

உலகளாவிய தொழில்துறையுடன் நெருக்கமாக பணியாற்றும் BIOMIN குழு, இப்பிரிவிலுள்ள தற்போதைய மற்றும் உருவாகும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கியுள்ள தீர்வுகளை வழங்குகிறது.

அனைத்து புவியியல்சார் பிராந்தியங்களிலும் செயல்படுகின்ற இக்குழு, உள்ளூர் சூழல் அமைப்பு குறித்த அறிவுடன் நடைமுறை சார்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கு செயல்படுகிறது.

மைகோடாக்சின்கள் (MYCOTOXINS)

ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருக்கின்ற போதிலும்கூட, மருத்துவம்சார் மைக்கோடாக்சிகோசிஸ் (காளான் நச்சேற்றம்) என்பது களத்தில் பொதுவாக ஏற்படும் ஒரு நிகழ்வல்ல. எனினும், நோய்குறித்தோன்றா மைக்கோடாக்சிகோசிஸ், குறைவான நோய்தடுப்பு செயல்திறனுக்கு வழிவகுக்கும் நோய்தடுப்பாற்றல் ஒடுக்கல் முதல், வீங்கிய கல்லீரல், வாய்க்குழி, கொண்டை மற்றும் தாடை ஆகியவற்றில் அழுகல் நோய் போன்றவைகள் வரையிலான பல்வேறு பாதிப்புகளை பண்ணைக் கோழிகள் மத்தியில் ஏற்படுத்தலாம்.

மேலும் அறிய!

குடல் நாளத்தின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன்

குடல் நாளத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிற பல காரணிகள் உள்ளன. இதன் விளைவாக, கோழிகளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது, இதற்கான காரணியாக மைக்கோடாக்சின்கள் (MYCOTOXINS) திகழ்வது உட்பட்ட ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள் வழியாக குடல்நாள ஆரோக்கியத்தை குறைப்பதில், தீவன கட்டமைப்பு மற்றும் உட்பொருட்கள் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன.

மேலும் அறிய

BCO லேம்னெஸ் - BCO Lameness

ஃபெமோரல் ஹெட்டில் (தொடைப்புழை தலை) உண்டாகும் கிருமி தொற்றினால், கான்ட்ரோநெக்ரோசிஸ் மற்றும் ஆஸ்டியோமைலிட்டிஸ் (BCO லேம்னெஸ்) உருவாகிறது மற்றும் அதனால் ஃபேமோரல் ஹெட் நெக்ரோசிஸ் (தொடைப்புழை தலை அழுகல்) ஏற்படும். உலகளாவிய கணக்கெடுப்புகள், கால் நொண்டுதல் பிரச்சனை பரந்துபட்டு காணப்படுவதை உறுதி செய்கிறது. ஒரு பொதுவான நோயாகத் திகழும் BCO லேம்னெஸ், நீண்டகாலம் உயிர்வாழும் பறவைகள் மற்றும் வேகமாக வளரும் பறவைகள் ஆகிய இரு பிரிவுகளையும் உலகெங்கிலும் பாதிக்கிறது.

fமேலும் அறிய!

மூலப்பொருள் பாதுகாப்பு

நுண்ணுயிரி மாசுபாடுகள், பூஞ்சை வளர்ச்சி, ஆக்சிடேட்டிவ் செயல்முறைகள், நச்சுப்பொருட்கள் உற்பத்தி, தானிய பூச்சிகள் வளர்ச்சி போன்றவைகளைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கிய இடர்பாடுகளை மட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மூலப்பொருள் பாதுகாப்புக்கான சேமிப்பு கூர்நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது, மூலப்பொருட்களில் ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுதலில் ஏற்படும் இழப்புகளையும் தவிர்க்கிறது.

மேலும் அறிய!

தீவணம் மற்றும் தண்ணீர் சுகாதாரம்

உயிரிபாதுகாப்பு மீதான விவாதங்கள், தண்ணிர் மற்றும் தீவனங்கள் பற்றிய விஷயங்களை அநேக நேரங்களில் விவாதிக்காமல் உதாசீனப்படுத்துகின்றன. எனினும், பண்ணையில் நோய் உயிரிகள் நுழைவதற்கான இரு முக்கிய வாயில்களாக இவை இரண்டும் இருக்கின்றன. தீவன உற்பத்தி செயல்முறையின்போது அழிக்கப்படும் அல்லது அழிக்கப்படாத நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் தொகுப்பினால், தீவனம் மாசடையலாம்.

மேலும் அறிய!

கிராம் - நெகட்டிவ் கட்டுப்பாடு

குடலில் கிராம்-நெகட்டிவ் கிருமி அதிகரிப்பது, வயிற்றுப்போக்கினை விளைவிப்பதனால், ஈரக் கழிவுகள் மற்றும் குடல் அழற்சியை உண்டாக்குகிறது. பிராய்லர் / பண்ணைக் கோழிகளில் வளர்ச்சி விகிதம் மற்றும் தீவன செயல்திறன் ஆகிய இரு அம்சங்களிலும் இது கெடுதலை உண்டாக்கும். மேலும் இது, கூமூட்டைகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்குமாறு செய்வதன் காரணமாக, முட்டை உற்பத்தி இழப்புகள் மற்றும் விற்பனை செய்யத்தக்க குறைவான முட்டைகளே கிடைப்பது என்ற பிரச்சனையை முட்டை கோழிகள் மற்றும் வளர்ப்புக் கோழிகள் மத்தியில் உருவாக்குகிறது.

மேலும் அறிய!

முட்டை தரம்

குஞ்சு பொறிக்கும் முட்டைகள் மற்றும் சமையலுக்கான முட்டைகள் ஆகிய இரண்டிலும், ஒரு முக்கிய பொருளாதாரக் காரணிகளாக, முட்டை ஓட்டின் தரம் திகழ்கிறது. ஆக்ரடாக்ஸின் A போன்ற சில மைகோடாக்சின்கள் (பூஞ்சண நச்சுகள்), வைட்டமின் D3 உற்பத்தியை பழுதுபடச் செய்வதன் வழியாக சிறுநீரக செயல்பாட்டினை பாதிக்கலாம் மற்றம் அதனால் கால்சியம் (CA++) வளர்சிதை மாற்றம் உண்டாகலாம். இது மோசமான முட்டை ஓட்டுத் தரம், அதிக உடைதல்கள் மற்றும் குறைவான குஞ்சு பொறிக்கும் திறன் ஆகியவைகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...