விதிமுறைகள் & நிபந்தனைகள்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளானது இந்த வலைத்தளத்திலிருந்து சேவைகளைப் பெறுதல் உள்ளிட்ட, இந்த வலைத்தளத்தின் பயன்பாட்டிற்கு பொருந்தும். இந்த நோக்கங்களுக்காக அல்லது வேறு ஏதேனும் நோக்கங்களுக்காக இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் இணங்கி நடக்க ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவில்லையெனில், வலைத்தளத்தைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கப்படுவீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை, இந்த வலைத்தளத்தின் பயன்பாட்டை நிர்வகிக்கும் வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் படிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில்நாங்கள்” “எங்கள்மற்றும்நமதுஎன வழங்கப்படுபவை பின்வருவதைக் குறிக்கிறது

BIOMIN Holding GmbH
Erber Campus
13131 Getzersdorf
Austria

1. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் திருத்தங்கள்

எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களைச் செய்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. திருத்தங்கள் இந்த வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட உடனேயே செயலாக்கப்பட்டுவிடும். இது போன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து நீங்கள் வலைத்தளத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் திருத்தங்களுக்கு நீங்கள் இணங்குகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

2. உறுப்புரிமை

இந்தத் தளத்தில் உள்ள சில தகவலை அணுகுவதற்கு, நீங்கள் உறுப்பினராக மாற வேண்டியிருக்கலாம். உறுப்பினராவதற்கும், தொடர்ந்து உறுப்பினராக இருப்பதற்கு நீங்கள் பதிவு செய்து, அவ்வப்போது இந்தத் தளத்தில் சேர்க்கப்படும் எங்களின் பிற குறிப்பிட்ட உறுப்புரிமை விதிகளுடன் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கேற்ப இணங்கி நடக்க வேண்டும்.

எங்களுக்கு கூடுதல் உறுப்புரிமைச் சேவைகளை வழங்குவதை நிறுத்துவதற்கும் மற்றும்/அல்லது எந்த நேரத்திலும் உங்கள் உறுப்புரிமையை முடித்துக்கொள்வதற்கும் உரிமை உள்ளது. உங்கள் பதிவு விவரங்கள் மாறினால், அவற்றைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் உறுப்பினர் சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

எங்கள் உறுப்பினர் சேவைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் எந்த கடவுச்சொற்களையும் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், மேலும் உங்கள் உறுப்புரிமையைப் பயன்படுத்தி உறுப்பினர் சேவைகளை அணுக வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது.

3. தகவல்

இந்த தளத்தில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் நல்ல நம்பிக்கையுடன் வழங்கப்படுகின்றன. தகவல்கள் பொதுவானவை மற்றும் அறிவுரை அல்ல என்பதை ஏற்கிறீர்கள். எங்கள் தகவல்கள் எங்களின் சொந்த உள்ளக ஆதாரங்களிலிருந்தும் பிற ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுகின்றன, மேலும் அவை அவ்வப்போது புதுப்பித்த நிலையில் இருக்கலாம் அல்லது புதுப்பிக்கப்படாமலும் இருக்கலாம். எனவே வழங்கப்படும் தகவல் அனைத்தும் தற்போதையவை, உண்மையானவை, துல்லியமானவை அல்லது முழுமையனாவை என்பதற்கு எந்த உத்தரவாதங்கள் அல்லது உறுதிகளை எங்களால் வழங்க முடியாது மற்றும் வழங்கவும் இல்லை. பொதுவாக இணையத்திற்கான கட்டுப்பாடு எங்களிடம் இல்லாததால், உங்கள் அணுகல் சரியாக நேரத்திற்கு, இடையூறு இல்லாமல் அல்லது பாதுகாப்பாக கிடைக்கும் என்பதற்கும் எங்களால் எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது.

இந்தத் தளத்தில் உள்ள எந்த தகவலையும் முற்றிலும் நம்புவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு அதற்கான தகுதியுடைய நபரிடம் நீங்களாகவே சொந்தமாக அறிவுரை மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. உரிமைதுறப்பு

இந்த வலைத்தளத்தை அல்லது ஏதேனும் இணைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்தியதால் உங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படக்கூடிய (கவனக்குறைவினால் ஏற்படக்கூடியவை உட்பட்ட) எந்த இழப்பு சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பை ஏற்கமாட்டோம், அத்துடன் இந்த வலைத்தளத்தின் மூலமாக அணுகப்பட்ட அல்லது தளத்தில் உள்ள தகவலை நம்பியதால் அல்லது அவற்றைப் பயன்படுத்தியதால் ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கான பொறுப்பையும் நாங்கள் ஏற்கமாட்டோம்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்டபடி, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு நிபந்தனை அல்லது உத்தரவாதமும் சேர்க்கப்படாது. ஒரு நிபந்தனை அல்லது உத்தரவாதக் கூற்றை சட்டக்கூறு மறைமுகமாகக் குறிப்பிட்டு, அதுபோன்ற எந்தவொரு நிபந்தனை அல்லது உத்தரவாதத்தை அந்தச் சட்டக்கூற்றைப் பயன்படுத்துவதையோ அல்லது எங்கள் பொறுப்புடைமையில் இருந்து விலகுவதையோ அல்லது மாற்றுவதையோ அத்தகைய சட்டக்கூறு தடைசெய்யும்பட்சத்தில், அந்த நிபந்தனை அல்லது உத்தரவாதம் நடைமுறையில் உள்ளதாகக் கருதப்படும், ஆனால், இந்தத் தளத்தின் வழியாக சேவையை மீண்டும் வழங்குவதற்காக அந்த நிபந்தனை அல்லது உத்தரவாதத்தை மீறும்பட்சத்தில் மட்டுமே நாங்கள் பொறுப்பேற்க முடியும்.

இலாப இழப்பு அல்லது வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய இழப்பு அல்லது சேதத்திற்கு எந்த விதத்திலும் நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம்.

5. குறிப்பிட்ட எச்சரிக்கைகள்

இந்த வலைத்தளத்தை நீங்கள் அணுகுவதும், இதிலுள்ள எந்த தகவலைப் பயன்படுத்துவதும் சட்டத்திற்குப் புறம்பானது இல்லை அல்லது உங்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டங்களால் தடைசெய்யப்பட்டவை இல்லை என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

இந்த வலைத்தளத்தை அணுகுவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் உங்கள் சொந்த கணினி அமைப்பைப் பாதிக்கக்கூடிய வைரஸ் ஆபத்துகள், தீங்குவிளைவிக்கும் கணினி குறியீடு அல்லது மற்ற வடிவிலான இடையூறு எதையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்ள வேண்டும்.

சந்தேகத்தை தீர்ப்பதற்காக, இந்த வலைத்தளத்தை அல்லது இணைக்கப்பட்டுள்ள எந்த வலைத்தளத்தையும் பயன்படுத்துவதனால் ஏற்படும் எந்த இடையூறு அல்லது உங்கள் சொந்தக் கணினியில் ஏற்படும் சேதத்திற்கான பொறுப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இந்த வலைத்தளத்தின் மூலமாக எங்களிடமிருந்து நீங்கள் பெறும் சேவைகள் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் நாங்கள் வழங்கவில்லை.

நாங்கள் எல்லா நியாயமான முன்னெச்சரிக்கைகளை செய்திருந்தாலும், உங்கள் கணினியில் அல்லது இந்த வலைத்தளத்தில் உள்ள தரவு அல்லது தகவலின் அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது உங்கள் பரிமாற்றங்களை மாற்றுவதால் ஆபத்துகள் உண்டாகக்கூடும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்த வகையான இழப்புகளுக்கும் எந்த விதத்திலும் கடமை அல்லது பொறுப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்.

6. உங்கள் பங்களிப்புகள்

அவ்வப்போது உங்களுக்கும் மற்றவர்களுக்கும், எங்களுடன் மற்றும்/அல்லது ஒருவருக்கொருவர் உரையாடலில் ஈடுபடுவதற்கும், இந்தத் தளத்தில் மெட்டீரியல் மற்றும் கருத்துகளைச் சமர்ப்பிதற்கும் உங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்போம். இத்தகைய பங்களிப்புகளுக்கு பின்வரும் விதிமுறைகள் பொருந்தும் மற்றும் கண்டிப்பாக கவனிக்கப்படும் (பொருந்தக்கூடிய சட்டங்களுடன்):

 • உங்கள் பங்களிப்புகள் எங்களால் தக்கவைக்கப்படலாம் மற்றும் எங்களின் தனியுரிமைக்கொள்கையின் படி, எங்களுக்கு தகுதியுள்ளதால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்ற முடியாத, நிரந்தரமான உரிமையை வழங்குகிறீர்கள்.
 • உங்கள் பங்களிப்புகள் அல்லது வேறு எவரின் பங்களிப்புகளிலும் உள்ள உள்ளடக்கம் அல்லது ஒழுங்குமுறைக்கு நாங்கள் பொறுப்பல்ல. அமலாக்க நிறுவனங்களால் அல்லது சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டவையால் உருவாக்கப்பட்ட உங்கள் அடையாளம் மற்றும் பங்களிப்புகளை அணுகுவதற்கு முழுவதுமாக சட்ட வேண்டுகோளுக்கு இணங்குவோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
 • ஆபாசம், அருவருப்பான உள்ளடக்கம் அல்லது பாகுபாடு ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை (உதாரணமாக, தேசியம், மதம், இனம், இனத்தோற்றம் அல்லது பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடை ஏற்படுத்துபவை) விளம்பரப்படுத்தவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, இடுகையிடவோ, காண்பிக்கவோ அல்லது கிடைக்கும்படி செய்யவோ கூடாது.
 • நீங்கள் அவதூறு, தொந்தரவு, தவறான அல்லது அச்சுறுத்தும் மொழி அல்லது மெட்டிரியலை அனுப்பவோ அல்லது இடுகையிடவோ கூடாது.
 • உங்கள் பங்களிப்புகளின் உண்மையான உருவாக்குனரை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பதற்காக, செய்தித் தலைப்புகளை தவறாக அல்லது வேறு மாதிரியாக (அதாவது, ஏமாற்றுவது) குறிப்பிடக்கூடாது.
 • சரியான அனுமதி இல்லாமல், எங்களுக்கோ மற்றவர்களுக்கோ சொந்தமான கணினிகள், கணக்குகள் அல்லது நெட்வொர்க்குகளை நீங்கள் அணுகவோ, பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது, அல்லது எங்களது அல்லது மற்றவர்களின் முறைமையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனுமதி இல்லாமல் ஊடுருவ (“ஹாக்கிங்அல்லதுகிராக்கிங்போன்றவை) முயற்சிக்கக் கூடாது.
 • இணைய வைரஸ்கள், வார்ம்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், பிங்கிங், ஃப்ளூடிங், மெயில்-பாம்பிங் அல்லது சேவையை மறுக்கும் தாக்குதல்கள் அல்லது இந்தத் தளத்தின் பயன்பாட்டை தடுக்கக்கூடிய அல்லது மற்றவர்கள் அதை திறம்பட பயன்படுத்துவதில் இடையூறை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயல்பாடுகள் குறித்த தகவலை விநியோகிக்கவோ அல்லது அவற்றை உருவாக்கி அனுப்புதலில் நீங்கள் ஈடுபடவோ கூடாது.
 • இந்த தளத்தின் மற்ற பயனர்களுக்கு அல்லது வேறு எவருக்கும் இந்த தளத்தின் மூலம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் சேவைகளை அல்லது தயாரிப்புகளை விளம்பரம் செய்யும் (பெரும்பாலும் "ஸ்பேம்" என அறியப்படும்) வேண்டாத மின்னஞ்சலை அனுப்பக்கூடாது.
 • இந்த தளத்தின் மற்ற பயனர்கள், எங்கள் செயல்பாடுகள், நற்பெயர், நல்லெண்ணம் அல்லது வாடிக்கையாளர் உறவுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக நாங்கள் தீர்மானிக்கும், சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான எந்த நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடக் கூடாது.

7. பதிப்புரிமை

இந்த வலைத்தளத்தின் மற்றும் அதன் எல்லா பகுதிகளின் (காணக்கூடியவை அல்லது கேட்கக்கூடியவை அல்லது குறியீடுகளை உள்ளடக்கியவை மற்றும் உள்ளடக்காதவை) பதிப்புரிமை எங்களுக்குச் சொந்தமானது அல்லது நாங்கள் உரிமம் பெற்றது. எந்தவொரு அதிகார வரம்பிலும் சட்டத்தால் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டால் அல்லது நாங்கள் வெளிப்படையாக உங்களுக்கு ஒப்புதல் அளித்தால் தவிர, வேறு எந்த முறையிலும் அல்லது எந்த வகையிலும் நீங்கள் இவற்றைச் செய்யக்கூடாது:

 • தனியாக குறிப்பிட்டிருந்தால் தவிர, இந்த வலைத்தளத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள படைப்புகளை நீங்கள் பயன்படுத்துதல், மறுசீரமைத்தல், சேமித்தல், விநியோகித்தல், காட்சிப்படுத்தல், வெளியிடுதல் அல்லது உருவாக்குதல் கூடாது; அல்லது
 • இந்த வலைத்தளத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள தகவலை, தயாரிப்புகளை அல்லது சேவைகளை வணிகமயமாக்கக் கூடாது.

8. வர்த்தக முத்திரைகள் (டிரேட் மார்க்ஸ்)

எங்களது செயல்பாடுகள், தயாரிப்பு அல்லது சேவைகளைக் குறிப்பதற்காக எங்களின் ஏதாவது வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தினால், அந்த வர்த்தக முத்திரை எங்களை குறிப்பிடுவதாக ஒரு அறிக்கையைச் சேர்க்க வேண்டும். வர்த்தக முத்திரைகள் எதையும் பின்வருவனவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது:

 • உங்களுடைய வர்த்தக முத்திரையுடன் ஒரு பகுதியாக அல்லது முழுமையாக;
 • எங்களுடையவை அல்லாத பிற செயல்பாடுகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளில்;
 • குழப்பமூட்டும், தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றக்கூடிய வகையில்;
 • எங்களையோ அல்லது எங்கள் தகவல், தயாரிப்புகள் அல்லது சேவைகளையோ (இந்த வலைத்தளம் உள்ளிட்ட) இழிவுப்படுத்தும் வகையில்.

எல்லா பிற வணிகமுத்திரைகள், தயாரிப்பு பெயர்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் மற்றும் www.biomin.net இல் தோன்றும் லோகோக்கள் போன்றவை அந்தந்த உரிமையாளர்களின் சொத்தாகும்.

9. வரையறுக்கப்பட்ட பயன்பாடு

எழுத்துப்பூர்வமாக நாங்கள் ஏற்றுக்கொண்டால் தவிர, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வலைத்தளத்திற்கான அணுகல், தனிப்பட்ட பயன்முறைக்கு மட்டுமே ஆகும். குறிப்பாக, எங்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் இந்த வலைத்தளத்திலிருந்து பெற்ற தகவலை விற்கவோ அல்லது வேறு ஏதேனும் வணிகச் செயல்பாட்டிற்காக தகவலைப் பயன்படுத்தவோ கூடாது.

10. இணைப்புகள் - சுட்டிகள்

இந்த வலைத்தளம் பிற வலைத்தளங்களுக்குச் செல்லக்கூடிய (“இணைக்கப்பட்ட வலைத்தளங்கள்”) இணைப்புகளைக் கொண்டிருக்கலாம். அந்த இணைப்புகள் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை சமீபத்தியவையாக இல்லாமலோ, தொடர்ந்து கண்காணிக்கப்படமாலோ இருக்கலாம்.

இணைக்கப்பட்ட வலைத்தளங்களுடன் தொடர்புடைய தனியுரிமை நடவடிக்கைகள் அல்லது உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இணைக்கப்பட்ட வலைத்தளங்களுடன் உள்ள எங்கள் இணைப்புகள், இந்த இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் உரிமையாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் அல்லது இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அடங்கிய எந்தவொரு தகவல், கிராஃபிக்ஸ், மெட்டீரியல்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் போன்றவை எதிர்மறையாக வரையறுக்கப்படாவிட்டால் தவிர, அவை நாங்கள் வழங்கும் ஒப்புதல், அங்கீகாரம் அல்லது பரிந்துரையாக கருதக்கூடாது.

எங்களது அனுமதி இல்லாமல் இந்த தளத்தில் நீங்கள் இணைய முடியாது. எவ்வாறாயினும், எங்கள் தளத்தில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு உள்ளடக்கமும் கட்டமைக்கப்பட்டிருக்காது, ஆனால் ஒரு தனி சாளரத்தில் திறக்கப்படும், இதிலிருந்து இது இந்த தளத்திலிருந்து வருகிறது என்பதை தெளிவாகக் கண்டறியலாம். அத்தகைய இணைப்பு செயலில் உள்ளது என்பதை உறுதிசெய்வதற்கு நாங்கள் பொறுப்பல்ல, மேலும் இந்த தளங்களின் எந்த மறு அமைப்புகளாலும் அத்தகைய இணைப்புகள் பாதிக்கப்படலாம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், இது எந்த அறிவிப்புமின்றி நடப்பதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம்.

11. மின்னஞ்சல்களை நாங்கள் கையாளும் முறை

சட்டப்பூர்வமான அவசியம் இருக்கிறது என நாங்கள் நம்பினால், நீங்கள் எங்களுக்கு அனுப்பும் எந்தவொரு மின்னஞ்சலையும் பத்திரமாக சேமித்து, எங்கள் வணிக செயல்பாடுகளுக்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம்.

12. தகவல் பாதுகாப்பு

துரதிருஷ்டவசமாக, இணையம் மூலம் செய்யப்படும் எந்தத் தரவு பரிமாற்றமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அத்தகைய தகவலை நாங்கள் பாதுகாக்க முயன்றாலும், நீங்கள் பரிமாற்றும் எந்த தகவலின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமும், உறுதியும் நாங்கள் வழங்கவில்லை. அதே போன்று, நீங்கள் எங்களுக்கு பரிமாற்றும் எந்தவொரு தகவலும் உங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் தான் பரிமாற்றப்படுகிறது. எனினும், நீங்கள் பரிமாற்றியதை நாங்கள் பெற்றவுடன், அந்தத் தகவலைப் பாதுகாப்பதற்கான எல்லா நியாயமான வழிமுறைகளையும் கையாளுவோம்.

13. அணுகலை நிறுத்துதல்

இந்த வலைத்தளத்திற்கான அணுகலை எந்த நேரத்திலும் அறிவிப்பின்றி நாங்கள் நிறுத்தலாம். எமது நிபந்தனையற்ற நிலைப்பாடு எவ்வாறாயினும் இத்தகைய முடிவை எடுப்பது அவசியம்.

14. கருத்துகள்/புகார்கள்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்புடைய ஏதேனும் கருத்துகள் அல்லது புகார்கள், அல்லது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை  Opens window for sending emaildataprotection(at)erber-group.net என்பதற்கு அனுப்பவும்.

15. பதிவு கொள்கை

பதிவு செய்யும்போது நீங்கள் வழங்கும் விவரங்கள் உங்களின் சொந்த விவரங்களாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும். வேறு ஒருவரை போல் ஆள்மாறாட்டம் செய்வது, இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மிகவும் கடுமையாக மீறுவதாகும்.

பதிவு தகவலை நாங்கள் சேகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், இந்தத் தளம் மூலம் அல்லது நீங்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நேரடியான தொடர்பு மூலம் உங்களுக்கு வழங்கும் சேவையை உங்களுக்கென தனிப்பயனாக்குவதற்காகும். உங்கள் பதிவு தகவலை வழங்குவதன் மூலம், சேவை மற்றும் விளம்பர தயாரிப்புகள் அல்லது உங்களுக்கு பிடிக்கும் என நாங்கள் கருதக்கூடிய சேவைகள் போன்றவற்றை அவ்வப்பொது நாங்கள் உங்களுக்கு அனுப்பலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

உங்கள் தனிப்பட்ட தகவலை சேகரிப்பதும், தக்கவைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம், மேலும் எங்கள் தனியுரிமைக் கொள்கையை உங்கள் தகவலுடன் கண்டிப்பாக கவனித்துக்கொள்வோம்.

ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், இதில் தொடர்புகொள்ளவும்: Opens window for sending emaildataprotection(at)erber-group.net

16. தனியுரிமைக் கொள்கை

(a) பொதுத் தகவல்

இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன், இந்தத் தளத்திற்கு பொருந்தக்கூடிய பதிவு/உறுப்பினர் விதிமுறைகளுடனும் சேர்த்துப் படிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல் செல்லுபடியாகக்கூடிய தரவு பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே செயலாக்கப்படும்.

(B) தரவு செயலாக்க கட்டுப்பாட்டாளர்

BIOMIN Holding GmbH

Erber Campus 1

3131 Getzersdorf

Austria

தரவு பாதுகாப்பு கேள்விகள் இருந்தால், dataprotection@erber-group.net என்பதில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

(c) வலைத்தளத்தைப் பயன்படுத்தும் போது தனிப்பட்ட தரவை செயலாக்குதல்

முடிந்த வரை, எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்படும் சேவைகளின் பயன்பாடு தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தாமலே செயலாக்கப்படும். இருப்பினும், எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்படும் குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, தனிப்பட்ட தரவைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு (.கா, விண்ணப்பதாரர் தளம்; குக்கிகளின் பயன்பாடு குறித்த மேலும் விவரங்களுக்கு பிரிவு 17-ஐப் பார்க்கவும்) மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்புடைய செயலாக்கங்களுக்கு, தனியுரிமை அறிக்கையில் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உங்கள் தரவைப் பயன்படுத்துவதற்கு உங்களின் வெளிப்படையான ஒப்புதலை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

எங்கள் வலைத்தளத்தில் படிவத்தின் பகுதியை உள்ளடக்கிய தனியுரிமைக் கொள்கையின் ஒப்புதல் அறிக்கையின் பெட்டியைக் கிளிக் செய்வதன் மூலம், தனியுரிமை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.

(d) எங்களைத் தொடர்புகொள்ளுதல்

வலைத்தளத்தில் உள்ள தொடர்பு படிவத்தின் வழியாக எங்களைத் தொடர்புகொள்ளும் போது அல்லது மின்னஞ்சலில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளும் போது நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவு, உங்கள் தொடர்பு விவரத்தைக் கையாளுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மற்றும் வேறு ஏதேனும் கூடுதல் கேள்விகளுக்காக அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு சேமித்து வைக்கப்படும். வேறு எந்த நோக்கங்களுக்காகவும் தரவை செயலாக்க முடியாது.

(e)  செய்திமடல்

உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெயரின் முதல் மற்றும் கடைசி பகுதி மற்றும் நாடு போன்றவற்றை உள்ளிடுவதன் மூலம் எங்கள் வலைத்தளத்தின் வழியே எங்கள் செய்திமடலுக்கு நீங்கள் சந்தா இணையலாம்.

இப்போது சந்தா இணைஎன்பதைக் கிளிக் செய்வதன் மூலம், செய்திமடலின் சந்தாவில் இணங்கி நடக்கவும், எங்களின் பொதுவான பயன்பாட்டு விதிமுறைகளையும் ஏற்கிறீர்கள்.

செய்திமடலின் கீழே உள்ள குழுவிலகு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலமும், குழுவிலகு பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்தொடர்வதன் மூலமும் எப்போது வேண்டுமாலும் செய்திமடல் பெறுவதிலிருந்து குழுவிலகிக்கொள்ளலாம்.

உங்கள் செய்திமடல் சந்தா இருக்கும்வரை உங்கள் தரவு சேமித்துவைக்கப்படும், சந்தாவானது ரத்துசெய்யப்பட்ட பிறகு அவை அழிக்கப்பட்டுவிடும்.

(f) உங்கள் உரிமைகள்

எங்களால் செயலாக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தரவின் உறுதிப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்புக்கு உங்களுக்கு உரிமை உள்ளது, அத்துடன் தனிப்பட்ட தரவை திருத்துதல், அழித்தல் மற்றும் கட்டுப்பாடு, தரவு பெயர்வுத்தன்மை மற்றும் மறுப்பதற்கான உரிமையும் உங்களுக்கு உள்ளது.

உங்கள் தனிப்பட்ட தரவை பயன்படுத்துவதற்கு நீங்கள் அளித்த ஒப்புதலை எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பங்கு ஒப்புதலை நீங்கள் திரும்பப்பெறுதலானது, அது திரும்பப்பெறுவதற்கு முன்பு ஒப்புதல் அடிப்படையில் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கான சட்டங்களை பாதிக்காது. Dataprotection@erber-group.net என்பதற்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உங்கள் திரும்பப்பெறலை அறிவிக்கலாம்.

உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தும் விதம் தரவு பராமரிப்பு சட்டத்தை மீறுகிறது அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்கள் தரவு பாதுகாப்பு உரிமைகள் மீறப்படுகின்றன என நீங்கள் நம்பினால் மேலதிகாரியிடம் புகாரளிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆஸ்திரியாவில், இது தரவு பாதுகாப்பு அதிகாரமாகும் ("Datenschutzbehörde").

(g) மூன்றாம் தரப்பினர்களின் இணைப்புகளுடன் தொடர்பில் தரவு பாதுகாப்பு குறிப்பு

இந்தத் தளத்தில் உள்ள இணைப்பை மற்ற தளத்தில் பயன்படுத்தும்போது, அந்தத் தளத்தின் தனியுரிமைக் கொள்கை நம் கொள்கையிலிருந்து மாறுபடும் என்பதை நினைவில்கொள்ளவும். எந்தவொரு மற்ற தளத்தின் தனியுரிமைக் கொள்கைகளுக்கும், நடவடிக்கைக்கும் நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம்.

17. குக்கீகள் பயன்பாடு

எங்களது வலைத்தளத்தையும் எங்களது சேவைகளையும் மேம்படுத்துவதற்காக, “Google Adwords Remarketing”-க்காக இந்த வலைத்தளத்தில் மூன்றாம் தரப்பினர் குக்கீகள் மற்றும் ரீமார்க்கெட்டிங் டேக்குகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் சிஸ்டமில் உள்ள இந்த டேகுகளின் அடிப்படையில், தனிப்பட்ட தகவல் வடிகட்டி அளவீடாகப் பயன்படுத்தப்படும். எப்படியாயினும், உங்கள் தனிப்பட்ட தரவு மூன்றாம் தரப்பினர்களுக்கு அனுப்பப்படாது.

குக்கீகள் என்பன வலைத்தளத்தைப் பார்வையிடும் போது உங்கள் உலாவிக்கு வலை சேவையகம் வழங்கும் சிறிய உரை கோப்புகள் ஆகும். உரைக் கோப்பானது நீங்கள் உலாவும் போது உங்கள் உலாவி சேமித்த ஏற்கனவே பார்வையிட்ட வலைத்தளங்களின் தரவைக் கொண்டுள்ளது.

(a) குக்கீகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல்

எங்கள் வலைத்தளத்தை நீங்கள் முதல் முறையாக அணுகும் போது, குக்கீகள் பயன்பாட்டை பற்றிய ஒரு தெளிவான புலப்படக்கூடிய குறிப்பு தோன்றி, வலைதளத்தைப் பார்வையிடும் போது குக்கீகள் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கிறீர்களா என உங்களைக் கேட்கும். அதே சமயத்தில், தரவு பயன்பாட்டின் தன்மை மற்றும் நோக்கம் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காக, எங்கள் வலைத்தளத்தில் குக்கீகள் பயன்படுத்தப்படுவதற்கான நோக்கங்கள் மற்றும் குக்கீகளின் வெவ்வேறு வகைகள் குறித்த எல்லா தேவையான தகவலும் இருக்கக்கூடிய எங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கான இணைப்பும் உங்களிடம் வழங்கப்படும்.

குக்கீகளை ஏற்கிறேன்பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், கீழே விவரிக்கப்பட்டுள்ளவாறு தரவு பயன்பாட்டை நீங்கள் வெளிப்படையாக ஏற்கிறீர்கள்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஒப்புதலை திரும்பப்பெறலாம் (விவரங்களுக்கு பிரிவு 17c-ஐப் பார்க்கவும்) எப்படியாயினும், சில வகையான குக்கீகள் எங்கள் தளம் இயங்குவதற்கு அவசியமாகும், குக்கீகளை முடக்குதல் இந்த வலைத்தளம் மற்றும் அது தொடர்புடைய சேவைகளின் செயல்பாடு மற்றும் செயல்திறனைப் பாதிக்கலாம்.

(b)  குக்கீகளை பயன்பாட்டின் வகைகள் மற்றும் நடத்தைகள்

பின்வரும் குக்கீகள் www.biomin.net ஆல் பயன்படுத்தப்படுகின்றன, இங்கே நிரந்த குக்கீகள் (இந்த குக்கீகள் அதன் அமைப்புகளின் அடிப்படையில் தானாகவே அழிக்கப்பட்டால் அல்லது கைமுறையாக அகற்றினால் தவிர, உலாவியை மூடிய பிறகும் உங்கள் சாதனத்தில் இருக்கும்), அத்துடன் அமர்வு குக்கீகள் (இந்த தற்காலிக குக்கீகள் தற்காலிகமாக மட்டுமே சேமித்துவைக்கப்படும் மற்றும் உலாவியை மூடிய பிறகு அழிக்கப்பட்டுவிடும்) ஆகிய இரண்டும்